சிங்கப்பூர் நாட்டின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சீனர்கள் இருவர் பொதுமக்களுக்கு இடையே விநோதமான முறையில் மோதிக் கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்குள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் திட்டித் தீர்த்த அந்த இருவரும், ஆக்ரோஷத்தின் உச்சக்கட்டமாகத் தங்கள் முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருவருக்கொருவர் துப்பத் தொடங்கினர்.

 

அவ்வாறு ஆக்ரோஷமாகத் தலையை ஆட்டியபடி அவர்கள் ஒருவரை ஒருவர் மிரட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவர்களது முகங்கள் மோதி முத்தமிடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியது. தீவிரமான மோதலாகத் தொடங்கிய இந்தச் சம்பவம், இறுதியில் கேலிக்குரிய நிகழ்வாக மாறியதைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலி பல லட்சம் பார்வைகளைப் பெற்று வரும் நிலையில், எதிரிகள் காதலர்களாக மாறிய தருணம் இது என்றும், மூன்று வயது குழந்தைகளைப் போல இவர்கள் நடந்து கொள்வதாகவும் இணையவாசிகள் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.