தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் தீவிரப் என்று ரசிகை ஒருவர் கொடுத்த பேட்டி பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் கூறியதாவது, விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்து விடுவேன். நான் ஈரோட்டில் விஜய்காகத்தான் இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தேன் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுள்ளேன். நான் முதல் முறை அதிமுகவுக்கும் இரண்டாவது முறை சீமானுக்கு ஓட்டு போட்ட நிலையில் அடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் ஓட்டு போடுவேன்.
ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அரிசி பருப்பில் ஊழல் செய்துவிட்டு இலவச பஸ்னு சொல்லிட்டு அதுல கூட எங்களை ஏற்றுவது கிடையாது. தண்ணீர் மற்றும் சாலை வசதியும் இல்லாத நிலையில் விஜய் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இருக்கும். எங்க வீட்டில் மொத்தம் ஒன்பது பேர் இருக்காங்க நாங்க 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவோம். அப்படி ஓட்டு போடல நான் அம்புட்டு பேருக்கும் சோத்துல விஷம் வைத்து விடுவேன். மேலும் விஜய் அண்ணன் வெற்றி பெற்றால் முருகனுக்கு மாலை போட்டு வருவதாக வேண்டியுள்ளேன் என்றார்.
