தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் கூட. இவர் இன்று ஈரோட்டில் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தை நடத்திய நிலையில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்தார். குறிப்பாக வள்ளுவர் கோட்டத்திற்கு காட்டும் மக்கள் நலனுக்கு திமுக காட்டவில்லை எனவும் இவர்கள் அரசாங்கம் நடத்துகிறார்களா.? இல்லையென்றால் கண்காட்சி நடத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக தீய சக்தி என்றும் தவெக தூய சக்தி என்றும் கூறிய விஜய் அண்ணா மற்றும் பெரியார் பெயரை கூறிக்கொண்டு கொள்ளையடிக்காதீர்கள் என்றும் நீங்கள் கொள்ளையடித்த காசு தான் உங்களுக்கு என்றும் துணை என்றும் எனக்கு மக்கள் என் மீது வைத்துள்ள பாசம் தான் என்றும் மாஸ் என்றும் கூறினார். மேலும் அவரது இந்த பேச்சு தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது விஜய் கவர்மெண்ட் நடத்துகிறீர்களா? அல்லது கண்காட்சி நடத்துகிறார்கள் என்று கேட்டது குறித்தும் திமுகவை தீய சக்தி என விமர்சித்தது குறித்தும் கேள்வி எழுப்பிய நிலையில் என்றாவது அவரிடமே நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்களா முதலில் அவரை பேச விடுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்‌