புதுச்சேரியில் லாட்டரி கிங் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார். இவர் தன்னுடைய கட்சி கொடியையும் அறிமுகப்படுத்திய நிலையில் 2026 தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகியும் நடிகருமான தாடி பாலாஜி தற்போது தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். நடிகர் விஜயின் முகத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்திய தாடி பாலாஜி அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தில் பணியாற்றி வந்தார்.

இருப்பினும் அவருக்கு தமிழக வெற்றிக்கழகத்தில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் புதிதாக ஆதவ் அர்ஜுனா அவருக்கு பதவி கொடுத்ததையும் விமர்சித்திருந்தார். மேலும் தமிழக வெற்றி கழகத்தை சமீப காலமாக அவர் விமர்சித்து வந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.