தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விலக முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து ஏற்கனவே காங்கிரஸ், ஐயுஎம்எல் இடதுசாரிகள் மற்றும் மதிமுக ஆகிய முக்கியக் கட்சிகள் விலகியுள்ள நிலையில், தற்போது விசிகவும் கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாகக் கூறப்படுவது அரசியல் அரங்கில் மாபெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

முன்னதாக, தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது என்றாலும், தற்போது விசிகவும் கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் அரங்கில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.