பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் இன்று திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்சனையை தீர்க்கவில்லை என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ள நிலையில் அது தொடர்பாக நடைபெறும் போராட்டத்தில் இன்று அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போலீசார் அனுமதி இன்றி பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக அண்ணாமலையும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அண்ணாமலை உள்ளிட்டவரை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
