வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவும் என்று விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். விஜய்யின் இந்த கருத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, “அரசியல் களத்தில் அதிமுகவின் இடத்தை எட்டிப்பிடிக்க விஜய் நினைத்தால் அது ஏமாற்றத்தில்தான் முடியும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விஜய்யை இன்னும் ஒரு நடிகராகத்தான் பார்க்கிறார்களே தவிர, ஒரு முழுநேர அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தமிழகத்தின் பிரதானப் போட்டி என்பது எப்போதும் போல திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையேதான் நிலவும் என்றும், இதில் மூன்றாவது சக்தியாக விஜய் உருவெடுக்க முடியாது என்றும் செம்மலை காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
