நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமண விழாக்கள் களைகட்டியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் திருமணக் கொண்டாட்டங்கள் குறித்த காணொலிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனது வருங்கால மருமகனை வரவேற்கும் விதமாக மாமியார் ஒருவர் ஆடிய உற்சாகமான நடனம் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
பாரம்பரிய உடையில் நகை அலங்காரங்களுடன் காட்சியளிக்கும் அந்தப் பெண்மணி ஒரு பாடலுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி மிகவும் இயல்பாக ஆடிய விதம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக மாமியார்கள் என்றாலே மிகவும் கண்டிப்பானவர்கள் என்ற பிம்பம் உள்ள நிலையில், இந்தத் துள்ளலான நடனம் அதனை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தப் பதிவு குறுகிய காலத்திலேயே பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. உறவினர்கள் கைதட்டியும் கைப்பேசியில் பதிவு செய்தும் அவரை உற்சாகப்படுத்திய நிலையில், இந்த மகிழ்ச்சியான தருணம் இன்றைய கால மாற்றத்தையும் உறவுகளுக்கு இடையே நிலவும் அன்பையும் பறைசாற்றுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
