உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக் என்ற நபர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி, புர்கா அணியாமல் தனது தாய் வீட்டிற்குச் சென்றதே இந்த ஆத்திரத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. மனைவியைச் சுட்டுக் கொன்றதை மகள்கள் பார்த்துவிட்டதால், அவர்களையும் ஃபரூக் விடாமல் கொன்றுவிட்டார்.
சுமார் 6 நாட்களாகப் மருமகளையும், பேத்திகளையும் காணவில்லை என்று ஃபரூக்கின் தந்தையே போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், ஆத்திரத்திலும் அவமானத்திலும் இவர்களைக் கொன்றுவிட்டதாக ஃபரூக் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
