கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள நீலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு விஷ்ணுமூர்த்தி கோயிலில் நடைபெற்று வந்த திருவிழா நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

திருவிழாவின் முக்கிய அம்சமாக, தெய்யம் எனப்படும் பாரம்பரிய வழிபாட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், அதை காண கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், தெய்யம் ஆடியவர் திடீரென ஒரு இளைஞரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த தாக்குதலால் அந்த இளைஞர் உடல்நலக்குறைவு அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருவிழா சூழலில் இவ்வாறு ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலையை உருவாக்கியது. மேலும் இந்த சம்பவம் குறித்து  தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.