திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று அதிகாலை 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, விபத்துக்குள்ளானது. வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்கப் பேருந்தின் ஓட்டுநர் திடீரெனத் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 14 பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்துத் தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.