பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த AYUSH மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவின் மேடையில் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் என்ற பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழாவில், முதலமைச்சர் நிதீஷ் குமார் அப்பெண் மருத்துவரின் ஹிஜாபை (மத உடையை) அவருடைய அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றுள்ளார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களைத் திகைக்க வைத்ததோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
He is chief minister of Bihar
Shamefulpic.twitter.com/JF3wJpSrXW
— Gabbar (@Gabbar0099) December 15, 2025
ஹிஜாப் என்பது ஒரு பெண்ணின் மத நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட கௌரவம் ஆகும். அதைத் தொடுவதோ அல்லது அகற்ற முயல்வதோ தனிமனித உரிமைக்கு எதிரானது. முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரே, ஒரு பெண்ணின் மத உடையை மேடையிலேயே இவ்வாறு பலவந்தமாக அகற்ற முயன்றது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இது ஓர் அநாகரீகமான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறி, இந்தச் சம்பவத்தின் காணொளி எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி, தீவிரமான கண்டனங்களை எழுப்பியுள்ளது.
