நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசு (Air Pollution) நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாசுவைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசியல்வாதிகள் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறி, எக்ஸ் தளத்தில் ஒரு கடுமையான பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவின் சாரம் இதுதான்: “நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அனைத்து காற்று சுத்திகரிப்பு (Air Purifier) இயந்திரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்.”
• Remove all Air Purifiers from Parliament.
• Remove all Air Purifiers from MPs and MLAs residences.
Let them breathe the same air as common people.
Only then will pollution become a real priority, not just a topic for speeches.
pic.twitter.com/Tcm09TwcPP— Dr. Rajeshwari Iyer (@RajeshwariRW) December 15, 2025
மேலும், “சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP, MLA) வீடுகளிலும் இருக்கும் அனைத்து காற்று சுத்திகரிப்பு கருவிகளையும் நீக்க வேண்டும்” என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள், சாதாரண மக்கள் சுவாசிக்கும் அதே மாசடைந்த காற்றை சுவாசிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே, காற்று மாசுபாடு என்பது பேச்சளவில் இல்லாமல், உண்மையான முக்கியத்துவம் கொடுத்து உடனடியாகத் தீர்க்க வேண்டிய ஒரு முக்கியப் பணியாக அரசியல் தலைவர்களால் கருதப்படும் என்று மக்கள் தங்கள் கோபத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
