தாய்லாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர், பொது இடத்தில் நீண்ட வரிசையில் நிற்காமல், தங்களது உடமைகளை (லக்கேஜ்) மட்டும் வரிசையாக அடுக்கி வைத்து, தங்களுக்குரிய இடத்தைப் பிடித்துச் சௌகரியமாக அமர்ந்திருந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவம் பாண்டே என்ற பயணி தனது இரு நண்பர்களுடன் இணைந்து, இந்தப் புதிய யுக்தியை ‘கிரியேட்டிவிட்டி’ எனக் குறிப்பிட்டு வீடியோவாகப் பதிவு செய்து ‘பீக் தேசி பிஹேவியர்’ என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிலையில், பல தரப்பினரும் இந்தப் பயணிகளின் செயலை மோசமான பொது நாகரீகக் குறைபாடு என்று கடுமையாகச் சாடி வருகின்றனர்.
View this post on Instagram
“>
வெளிநாடுகளில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் குறித்த எதிர்மறையான பிம்பங்களை இது வலுப்படுத்துவதாகவும், வரிசையில் பொறுமையாகக் காத்திருக்கும் மற்றவர்களுக்கு இது அநீதியானது என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
