அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வந்துள்ளார். இருப்பினும், அவர் இங்கே எந்த கால்பந்து போட்டியிலும் விளையாடவில்லை. இதற்குக் காரணம், அவர் எடுத்துள்ள ஒரு பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் தான் எனக் கூறப்படுகிறது.

மெஸ்ஸி தனது இடது காலுக்கு சுமார் ₹8,000 கோடிக்கு காப்பீடு செய்துள்ளார். இந்த காப்பீட்டு பாலிசி, அவர் அர்ஜென்டினா அணிக்காகவோ அல்லது இன்டர் மியாமி அணிக்காகவோ விளையாடும்போது காயம் அடைந்தால் மட்டுமே பொருந்தும்.

இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் பெரும்பாலும் “எக்ஸிபிஷனல் போட்டிகள்” (Exhibition matches) என்ற வகையைச் சார்ந்தவை. இந்தக் காப்பீட்டு பாலிசியின்படி, எக்ஸிபிஷனல் போட்டிகளில் காயம் ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்காது. எனவே, காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகள் காரணமாகவே மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்ஸி விளையாடாதது அவரது இந்திய ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.