தமிழ்நாடு 2025-ம் ஆண்டு கணக்கின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் மதிப்பு ₹35.68 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 16% வளர்ச்சி அடைந்து, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களை விஞ்சியுள்ளது. சென்னை, ஸ்ரீபெரும்புதூர் (ஆட்டோ/எலெக்ட்ரானிக்ஸ்) மற்றும் கோயம்புத்தூர் (ஜவுளி) போன்ற முக்கியத் துறைகள்தான் இந்த வளர்ச்சிக்குப் பலமாக உள்ளன.
Tamil Nadu ranks as India's second-largest economy by total GSDP in 2025, with a projected ₹35.68 lakh crore, driven by manufacturing, services, and exports. The state achieved 16% nominal GSDP growth in 2024-25, reaching ₹31.19 lakh crore, outpacing peers like Karnataka and… pic.twitter.com/m996TwFtFi
— A2D Channel (@A2D_Army) December 14, 2025
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹3.62 லட்சம் ஆக உள்ளது. அதிகத் திறன் வாய்ந்த தொழிலாளர்கள், 48% நகர்மயமாக்கல் மற்றும் சிறு தொழில் வளர்ச்சி ஆகியவையே இதற்குக் காரணம். தேசிய மக்கள் தொகையில் 6% உள்ள தமிழ்நாடு, இந்தியாவின் மொத்த ஜி.டி.பி-யில் 9% பங்களிக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை அடைய, செமிகண்டக்டர்கள் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தமிழ்நாடு அதிக முதலீடு செய்து வருகிறது.
