துர்க்மெனிஸ்தானில் நடந்த சர்வதேச மன்றத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு பொறுமையிழந்த ஷெரீஃப், புடின் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் பேசிக்கொண்டிருந்த அறைக்குள் திடீரென நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதை நெட்டிசன்கள் “இராஜதந்திர ரீதியிலான தவறு” என்று விமர்சித்து, ஷெரீஃப்பை சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். துர்க்மெனிஸ்தான் தனது நடுநிலைமைக் கொள்கைக்கு ஐ.நா. அங்கீகாரம் கிடைத்த 30-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த சர்வதேச மன்றத்தை நடத்தியது.

“>

 

நேற்று நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஷெரீஃப் சுமார் 10 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிலர் புடினின் இந்தச் செயலை விமர்சித்தும், வேறு சிலர் ஷெரீஃபைப் பற்றி அவதூறாகவும் கருத்துக்களை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.