விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களான ‘சிறகடிக்க ஆசை’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சென்னை பிராட்வேயில் கணவருடன் வசித்து வந்த ராஜேஸ்வரிக்கு, அவருக்கும் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு, மனச்சோர்வு காரணமாகத் தாயின் உயர் இரத்த அழுத்த மாத்திரைகளை (பிபி மாத்திரை) அதிக அளவில் உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி, இன்று சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் அருணுக்கு அம்மாவாகவும், ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பாக்யாவின் தோழியாகவும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
