சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், திருமணம் ஆன ஒரு நபருடன் கள்ளக்காதலில் இருந்த இளம்பெண் ஒருவர், அந்த நபரின் மனைவி திடீரென வீட்டிற்குள் வந்ததால், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 10வது மாடியில் இருந்து குழாய் பைப்பை பிடித்து இறங்க முயன்ற பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.
காதலியுடன் பலமுறை நேரில் சந்தித்துத் தனிமையில் இருந்த அந்த நபர், சம்பவத்தன்று தன் வீட்டிற்கே கள்ளக்காதலியைக் கூட்டி வந்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்தபோது, அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர், தனது காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அது 10வது மாடி என்பதால், அந்தப் பெண் அங்கிருந்து கீழே இறங்குவதற்காக பால்கனி வழியாக குழாய் பைப்பை பிடித்து இறங்க முயன்றார். இதை அதிர்ச்சியுடன் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகச் செயல்பட்டு, அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
