வங்கதேசத்தில் இளைஞர்கள் புரட்சியால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நாட்டை விட்டு தப்பி ஓடிய அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி அதாவது 2026 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
