லண்டனில் உள்ள ஒரு நிதிநுட்ப (Fintech) நிறுவனத்தில் ‘சீஃப் ஆஃப் ஸ்டாப்’ (Chief of Staff) ஆக முழுநேர வேலை பார்த்துக் கொண்டே, தனது வழக்கமான மாதச் சம்பளத்தைத் தவிர்த்து, வெறும் ஒரே மாதத்தில் மட்டும் ‘சைடு ஹஸ்டில்’ (Side Hustle) எனப்படும் கூடுதல் தொழில்கள் மூலம் சுமார் 63 லட்ச ரூபாய் (£50,102 பவுண்டுகள்) சம்பாதித்து இந்தியப் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ள நெகிழ்ச்சியான தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
அதிதி மிஸ்ரா என்ற அந்த இந்தியப் பெண், தான் ஒரு “முழுநேர கார்ப்பரேட் பெண் மற்றும் பகுதிநேர உள்ளடக்க உருவாக்குநர் (Content Creator)” என்று குறிப்பிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அசுர வளர்ச்சி குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாகத் தனது முக்கிய வேலையில் கவனம் செலுத்தும் அதிதி, பிராண்ட் கூட்டாண்மை (Brand Deals) மூலம் மட்டும் 31 லட்சம் ரூபாயும் (£25,102), பிற நிறுவனங்களுக்கான வீடியோக்களை தயாரிக்கும் யுஜிசி (UGC) மூலம் 12 லட்ச ரூபாயும் (£10,000) ஈட்டியுள்ளார்.
View this post on Instagram
இதுதவிர, பொது மேடைகளில் பேசுவது மற்றும் பயிற்சிகள் வழங்குவது மூலம் 12 லட்ச ரூபாயும் (£9,500), ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது மூலம் 6 லட்ச ரூபாயும் (£5,000), 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்களைக் கொண்ட தனது கட்டண செய்திமடல் (Paid Newsletter) மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் மூலமும் மீதித் தொகையைச் சம்பாதித்து அசத்தியுள்ளார்.
பிரிட்டன் விசா விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட வேலை தவிர்த்து வாரத்திற்கு 20 மணி நேரம் கூடுதல் தொழில் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளதைச் சரியாகப் பயன்படுத்தி, எவ்வித விதிகளையும் மீறாமல் இந்த இமாலயப் பணத்தை அவர் சம்பாதித்துள்ளார்.
சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ள அதிதியின் இந்த மிரட்டலான கூடுதல் வருமான ரகசிய வீடியோ, தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, “நமக்கும் இந்த மாதிரி ஒரு ஐடியா கொடுங்க பாஸ்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் லைக்ஸ்களை அள்ளி ட்ரெண்டாகி வருகிறது.
