பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கட்சியின் முதல் தீர்மானத்தில், “ஊழல் மலிந்த திமுக ஆட்சியை மாற்றி புதியதோர் தமிழகத்தை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டதுடன், கட்சியின் வெற்றித் தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்று, கூட்டணிக்கான இறுதி முடிவுகளை எடுக்க அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
இரண்டாவது தீர்மானத்தின் மூலம், தவெக சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பொறுப்புகள் மற்றும் பணிக்கட்டளை குறித்து தலைவர் விஜய் நேரடியாக முடிவு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மூன்றாவது தீர்மானத்தின் படி, “இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க” எனக் கூறி, “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பணிகள் குறித்த எல்லா தீர்மானங்களும் தலைவரின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நான்காவது தீர்மானத்தில், எதிரணிகள் பரப்பும் அவதூறு மற்றும் பொய்யுரைகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, வலுவான பரப்புரைக் நடவடிக்கைகளை மேற்கொள்வது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
