சமூக வலைதளமான ‘X’ தளத்தில் பரவலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் பெண் தனது துணிச்சலான செயலால், தன்னைத் தாக்க வந்த கொள்ளையரைத் தனியாக எதிர்த்துப் போராடி விரட்டியடித்த காட்சிப் பதிவாகியுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர் பயத்தில் பின்வாங்கி, ஒரு சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி அல்லது பணம் மாற்றும் மையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்தக் கொள்ளை முயற்சி நடந்ததாகத் தெரிகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் அந்தப் பெண்ணை அணுகி, அவரது பையின் பட்டையை வெட்ட முயல்கிறார். அந்தப் பெண் உடனடியாக அவரை தள்ளிவிட்டு, தனது உடைமைகளைப் பாதுகாக்கப் போராடுகிறார். அந்தக் குழப்பமான தருணத்தில், அவரது ஆண் நண்பர் பயத்தில் பின்வாங்கி, அருகிலிருந்த சுவரின் பின்னால் மறைந்து நின்று, பாதுகாப்பான இடத்தில் இருந்து சண்டையைப் பார்த்தார்.
சுமார் 15 வினாடிகள் அந்தப் பெண் தனியாகவே கொள்ளையரை எதிர்த்துப் போராடினார். பின்னர், அவ்வழியே வந்த ஒரு பயணி தலையிட்டு, தன் கையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டால் கொள்ளையரைத் தாக்குகிறார். இதைத் தொடர்ந்து மேலும் மூன்று பேர் வந்து கொள்ளையரைப் பிடித்துத் தரையில் தள்ளுகின்றனர். இந்தச் சண்டையின் முடிவில் கூட, அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் சண்டையில் பங்கெடுக்கவில்லை.
🔥NEW: Spineless White man HIDES as his girlfriend is attacked by armed robber with knife!!
‘Biggest p—y I’ve seen in a while’ pic.twitter.com/HsxdAZS2fT
— i Expose Racists & Pedos (@SeeRacists) December 11, 2025
கொள்ளை முயற்சி நடந்தபோது அவர் செயல்படாதது குறித்துச் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
