நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி நாஞ்சில் சம்பத், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கும் முன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யுத்த காலம் வந்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) வெற்றிச் சமவெளிக்குக் கொண்டு செல்ல, துப்பாக்கி ஓசையை விடவும், புயலின் வேகத்தை விடவும் பெரிய கனவுகளுடன் நான் பயணிக்க உள்ளேன்.

எனக்கு இதில் எந்தச் சிரமமும் இல்லை” என்று ஆவேசமாகக் கூறினார். இந்தக் கூட்டம், சென்னையில் உள்ள பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 11) நடைபெற்று வருகிறது.