குஜராத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் 35 வயது வாலிபர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வல்சாட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், மனநல குறைபாடுகளுக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, பக்கத்து வீட்டு வாலிபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் அவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், இளம்பெண் கர்ப்பமாக இருப்பது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
மகளின் நிலை குறித்து பெற்றோர் விசாரித்தபோது, பக்கத்து வீட்டு வாலிபர் தான் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பெற்றோர் வல்சாட் போலீசில் புகார் அளித்தனர்.
மேலும் புகார் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
