பெரும்பாலான கார்களின் பின்புற டேஷ்போர்டில் மென்மையான பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது பலருக்கும் வழக்கம். ஆனால் புனேவில் ஒரு வாகன ஓட்டுநர், இந்த நடைமுறையை முற்றிலும் வினோதமான மற்றும் பயமுறுத்தும் வடிவமாக மாற்றியுள்ளார். சாதாரண பொம்மைகள் அல்லாமல், யதார்த்தமாய் தோற்றமளிக்கும் ஏழு பயங்கரமான பொம்மைகளை பின்புற டேஷ்போர்டில் வரிசையாக வைத்து ஓட்டிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

ஒரு பைக் ஓட்டுநர் எடுத்த இந்தக் காட்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “இவர்கள் அன்னாபெல் மற்றும் தாத்யா வின்சுவின் குழந்தைகள்!” என்ற நகைச்சுவையான தலைப்புடன் பதிவான இந்த வீடியோ, இணைய பயனர்களிடையே பெரும் அதிர்ச்சி, ஆச்சரியம் மற்றும் நகைச்சுவையையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Throttle_XP (@throttle_xp)

வீடியோவில், வெற்று முகபாவங்களுடன் இருந்த பொம்மைகள், LED விளக்குகள் ஒளிரத் தொடங்கியதும், கார் ‘பேய்கள் அணிவகுப்பு’ போல காட்சியளித்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பதிவில் “புனேவில் மட்டுமே – எதுவும் சாத்தியம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணைய பயனர்கள் பலரும் நகைச்சுவை கலந்த கருத்துகளைப் பதிவு செய்தனர்.

“இதை இரவில் பார்த்தால் எனக்கு சிறிய மாரடைப்பு வந்திருக்கும்,” என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.

“இது நேரடியாக ஒரு திகில் படக் காட்சி போல இருக்கிறது,” என மற்றொருவர் குறிப்பிட்டார்.

“புனே ஒருபோதும் ஆச்சரியப்படுத்துவதில் தவறுவதில்லை,” “சிக்னலில் இதன் பின்னால் நின்றால் என்ன ஆகும்!” “நான் உடனே U-டர்ன் எடுத்திருப்பேன்,” என்ற கருத்துகளும் பதிவாகின. மேலும் இந்த பொம்மைகள் உண்மையிலேயே பயமுறுத்துகின்றன. புனே போக்குவரத்து கூட இப்போது பேய் போல் உணரப்படுகிறது,” என்று ஒருவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.