சமூக ஊடகங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அதில் சில தனித்துவமான உள்ளடக்கங்கள் இணைய பயனர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் பயணத்துடன் தொடர்புடைய வினோதமான காட்சியை பதிவு செய்துள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் போது டிக்கெட் வைத்திருப்பது அவசியம். TTE பரிசோதனை செய்யும் போது பயணிகள் டிக்கெட்டை காட்டுவது வழக்கம். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவில், ஒரு இளைஞர் டிக்கெட்டை கையில் இல்லாமல், நெற்றியில் கயிற்றால் கட்டிக்கொண்டிருப்பது போன்ற காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அவர் நின்றுகொண்டிருக்கும் பொழுதே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த வீடியோவை X தளத்தில் @VishalMalvi_ என்ற கணக்கில் பகிர்ந்துள்ளனர். ‘இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க அவர் மிகவும் பயப்படுகிறார்’ என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்தக் காணொளி, தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

வீடியோவை பார்த்த இணைய பயனர்கள் பலரும் நகைச்சுவையாக கருத்துப் பதிவு செய்துள்ளனர்.
ஒரு பயனர், “இப்படி கட்டிட்டா டிக்கெட் தொலைந்து போகாது, பாதுகாப்பாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
மற்றொருவர், “அவனுடைய வெற்றி பயத்திற்கு அப்பாற்பட்டது,” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் சிலர், “நான் இப்படிச் செய்ய மாட்டேன்,” “எப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்?” என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வினோதமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.