தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று புதுச்சேரியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கேட்டதற்கு அவரை பெண் எஸ்பி கடுமையாக எச்சரித்தார். இந்த நிலையில் பொதுக்கூட்டத்தின் போது ஒருவர் எருமை மாடுகளை பார்த்து இதற்கும் பாஸ் இருக்கிறதா உள்ளே விடுங்கள் என்று கூறினார். மேலும் அவர் மாட்டுடன் அலப்பறை செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அவர் செய்த விஷயத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.