தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் ஆனந்த் கண்டிப்பாக தமிழ்நாட்டை போன்று அடுத்து வரும் தேர்தலில் புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமையும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசி வருகிறார். அவர் நான் புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன். 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் எழுதி அனுப்பியும் மத்திய அரசு இதுவரை புதுச்சேரிக்கு மாநில அரசு அந்தஸ்தை வழங்கவில்லை. புதுச்சேரிக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் கடன் வாங்கும் சூழல் நிலவுகிறது.
புதுச்சேரி தேர்தல் களத்தில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறக்கும் என்றார். மேலும் தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் மக்கள் என்னை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு என்று வேறுபாடு கிடையாது நாம் அனைவருமே ஒன்றுதான். வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் நாம் அனைவரும் சொந்தங்கள் இல்லை என்று ஆகிவிடுமா. உலகில் எந்த இடத்தில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லோரும் ஒன்று தான் எல்லோரும் நம்முடைய உயிர் தான் என்றார். மேலும் விஜய் மேடை ஏறியதும் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேச தொடங்கினார். அப்போது வந்த சத்தம் விண்ணைப் பிளக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
