திமுக அமைச்சர்கள் மீது மத்திய அரசு இப்போது அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், திமுகவைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு பொய் வழக்குகளைப் போடுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு மத்திய அரசு என்ன செய்தாலும், திமுக அவற்றைச் சந்தித்து வெற்றி காணும் வலிமையான இயக்கம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தச் சோதனைகளைக் கண்டு நாங்கள் பயப்படப் போவதில்லை என்றும், ‘எங்கள் மடியில் கனமில்லை, அதனால் நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை’ என்றும் உறுதியாகக் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவை விமர்சிக்கத் தகுதி இல்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தபோது, அவர் பயந்து முகத்தை மூடிக்கொண்டு டெல்லி சென்றதாகச் சாடினார். திமுக எப்போதும் மத்திய அரசைத் துணிச்சலாக எதிர்த்து நிற்கும் என்றும் அவர் கூறினார்.
