மதுரை சிவரக்கோட்டையில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் இடத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீதுப் பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (டிசம்பர் 8) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மு.க. அழகிரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “விசாரணைக் கோர்ட்டில் உள்ள வழக்கை மனுதாரர் ஏன் எதிர்கொள்ளக் கூடாது?” என்று அழகிரி தரப்புக்குக் கேள்வி எழுப்பியதுடன், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு மு.க. அழகிரிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
