கேரளாவில் கடந்த 2017 ஆண்டு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடுஞ்செயல் தொடர்பாக மலையாளத் திரைப்பட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை எர்ணாகுளம் நீதிமன்றம் வாசித்து வருகிறது. இந்தத் தீர்ப்பு சினிமாத் துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பை வெளியிட்டது. இந்தத் தீர்ப்பின்படி, நடிகர் திலீப் குற்றவாளி என்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதன் காரணமாக, நடிகர் திலீப் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசியல் மற்றும் திரைப்படத் துறையில் பலவிதமான விவாதங்களையும் பேச்சுக்களையும் ஏற்படுத்தியுள்ளது. விடுதலைக்கு பின்பு நடிகர் திலீப்பின் அடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.