கோவாவின் வடக்கு கோவாவில் உள்ள ஆர்போரா (Arpora) பகுதியில் இருக்கும் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ (Birch by Romeo Lane) என்ற இரவு நேரக் கேளிக்கை விடுதியில் (Nightclub), நேற்று (டிசம்பர் 6, சனிக்கிழமை) இரவு சுமார் 12:04 மணியளவில் கோரத் தீ விபத்து ஏற்பட்டது.

விடுதியின் கூரையிலிருந்துத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதைக் கண்ட அங்கு நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள், அச்சத்தில் வெளியே ஓடிச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 சுற்றுலாப் பயணிகளும், 14 விடுதி ஊழியர்களும் அடங்குவர்.

இந்தச் சம்பவம் குறித்து விடுதியின் உரிமையாளர் மற்றும் பொது மேலாளர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கும் (Magisterial Inquiry) அவர் உத்தரவிட்டுள்ளார்.