உத்தரப் பிரதேசம், மீரட் நகரில் (Meerut, UP) உள்ள லோஹியானகர் பகுதியில் (Lohiyanagar) உள்ளக் கடை வாசலில், அடையாளம் தெரியாத ஓர் இளைஞரின் சடலம் கிடந்ததைக் கண்டு, கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்தக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, அதிகாரப்பூர்வ சீருடையில் இருந்தச் சில போலீஸார் இரவோடு இரவாக அந்தச் சடலத்தை அங்கேக் கொண்டு வந்து வீசிச் சென்றது தெரிய வந்துள்ளது.
Meerut: The UP police found a dead body. It was unidentified. The police then placed the body in an e-rickshaw and dumped it in another police station area. SSP Dr Vipin Tada suspended three cops. That’s all that happened. pic.twitter.com/fQTzKFStQy
— Krishna Chaudhary (@KrishnaTOI) December 5, 2025
பிரேதப் பரிசோதனைச் சிக்கல்களைத் (Postmortem Procedures) தவிர்க்கும் நோக்கில், எல்லைப் பிரச்னையை உருவாக்கும் விதமாக, ஒரு காவல் நிலைய எல்லையில் கிடைத்தச் சடலத்தை இரவில் வேறு ஒரு காவல் நிலைய எல்லைக்குக் கொண்டு வந்து வீசியுள்ளனர்.
இந்தச் சிசிடிவி வீடியோச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையேக் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாகச் செயல்பட்ட மீரட் காவல்துறை கண்காணிப்பாளர், ஒரு அவுட்போஸ்ட் பொறுப்பாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு ஹோம் கார்டு உட்பட மூவர் மீதுத் தற்காலிகப் பணிநீக்கம், பணி நீக்கம் என உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
