இந்தோனேசியாவின் பாலியில் உள்ள ஒருத் துணிக் கடையில், ஜப்பானியச் சுற்றுலாப் பயணிகள் வாடிக்கையாளர்கள் போல நடித்து, 11 செட் ஆடைகளைத் திருடிச் சென்றச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
அன்றாட இருப்புப் பரிசோதனையின்போது (Inventory) துணிகள் காணாமல் போனதைக் கண்ட கடை உரிமையாளர், சிசிடிவி காட்சிகளைப் (CCTV footage) பரிசோதித்ததில் இந்தத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது.
A shop owner in Bali, Indonesia discovered after the daily inventory that 11 clothing sets were missing. After checking the cameras, he noticed that a group of tourists from Japan were the ones who stole them, in a rare incident that may be the first of its kind.
The video… pic.twitter.com/u3L4o5NLhO
— News 24 (@News_2028) December 5, 2025
சுமார் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட சுற்றுலாப் பயணிக் குழு, ஒருவருக்கொருவர் கவனத்தைத் திசை திருப்பும் விதமாகச் செயல்பட்டு, ஒரு சில ஆண்கள் மட்டும் துணிகளை எடுத்துத் தங்களதுப் பையில் மறைத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவி-யில்ப் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ ஜப்பானியச் சமூக ஊடகங்களில் பரவி, “இந்த நபர்கள் தங்கள் நாட்டிற்கே நிரந்தரமான அவமானம்” என்றுப் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். உள்ளூர் வியாபாரிகள், இதுபோன்றச் செயல்கள் சிறு வணிகர்களைப் பெரிதும் பாதிப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
