இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சமீபகாலமாக எடுத்து வரும் விசித்திரமான முடிவுகளால், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இந்திய அணியின் முடிவெடுப்பவர்கள் அவரை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர் என்றுப் புகார் எழுந்துள்ளது.

சையத் முஷ்டாக் அலி தொடரில் (Syed Mushtaq Ali Trophy) ஐந்து போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்திருந்தும், ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை என்றுத் தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிரசித் கிருஷ்ணா நல்ல பந்துவீச்சாளர் என்றாலும், அவர் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் நல்ல பந்துவீச்சாளர்களை ஓரம் கட்டிவிட்டீர்கள்” என்றும் ஹர்பஜன் சிங் அணியின் நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அணியில் வருண் சக்ரவர்த்தியைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.