சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களை அதிகரிக்கும் போட்டி நாளுக்கு நாள் ஆபத்தான நிலைக்கும் தள்ளிக் கொண்டிருக்கிறது. அதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டாக, ஒரு இளைஞன் தனது பேண்ட்டில் தீ வைத்து ரீல் எடுத்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடக தளம் X-இல் @shwetayadav8474 பகிர்ந்த இந்த வீடியோவில், ஒருவர ரீல்ஸ் செய்யவேண்டும் என்ற நோக்கில் தனது பேண்ட்டுக்கு தீ வைக்கிறான். ஆரம்பத்தில் நண்பர்கள் அதை அணைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் சில நொடிகள் கழித்து தீவிபத்து வேகமாக பரவி, ஆடைகள் முழுவதும் எரிகிறது. அதனால் பயந்துபோன அவர் குதித்து ஓடி அலறுகிறார். நண்பர்கள் தீ அணைக்க முயற்சித்தாலும், அவர் தீக்காயங்களால் தவித்துக் கொண்டிருப்பது காட்சியில் தென்படுகிறது.
छपरी गिरी के चक्कर मे पीछ@वाड़ा जल के तंदूर बन गया pic.twitter.com/iD20ZCLnO7
— shweta yadav (@shwetayadav8474) December 3, 2025
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதும், பயனர்கள் பலரும் கேலிகரமான கருத்துகளைப் பதிவு செய்தனர். “இனி ரீல் எடுக்க மாட்டார்”, “வீர கூட்டம் எல்லாம் ஓடி விட்டது”, “ரீலுக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்” போன்ற கருத்துகள் பெருகின.
சிலர் இளைஞனை கோமாளி என விமர்சித்தனர். “இந்த ரீலில் சம்பாதித்தது எல்லாம் சிகிச்சைக்கே போகும்” என வேறு ஒருவர் குறிப்பிட்டார். “இதுபோன்ற செயலை வீட்டில் முயல வேண்டாம்” என எச்சரித்தவர்களும் இருந்தனர்.
மேலும் இளைஞனின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் அபாயகரமான ஸ்டண்ட் செய்யும் போக்கின் ஆபத்து குறித்து இந்த வீடியோ மறுபடியும் எச்சரிக்கையாகி உள்ளது.
