தெற்கு கரோலினாவைச் (South Carolina) சேர்ந்த 26 வயது ஆசிரியர் ஷெல்லி குனான் (Shelly Gannon), கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ச்சியானப் பல உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய் மருத்துவ உலகையேத் திகைக்க வைத்துள்ளது.

ஷெல்லி, ‘சிரித்தால் ஏற்படும் கடுமையானத் தலைவலி, வாந்தி, உடல் சூட்டைத் தாங்க முடியாமை’ போன்ற அறிகுறிகளால் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.

நீண்ட காலப் பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு சியாரி மேல்ஃபார்மேஷன் (Chiari Malformation) என்ற அரிய நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கலான நிலையில், அவரது மூளையின் கீழ்ப்பகுதி (Cerebellar Tonsils) மண்டை ஓட்டின் அடியிலிருந்து (Skull) கீழே இறங்கி, முதுகுத்தண்டு வடம் (Spinal Cord) செல்லும் பகுதியில் அழுத்தம் கொடுக்கிறது.

‘மூளை மண்டை ஓட்டில் இருந்து வெளியேறுவது போல்’ உணருவதாக ஷெல்லி கூறியுள்ளார். ஆரம்பத்தில் சிறியதாக இருந்த பாதிப்பு, தற்போது அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு, தனதுப் பிரச்சினைக்குரிய உண்மையானக் காரணத்தை அவர் தற்போது அறிந்துகொண்டது, அவருக்குச் சிகிச்சைக்கான ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளது.