சிவகாசி மேயர் சங்கீதாவின் ‘இன்ப இல்ல’ திருமண விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விழாவில் பேசுகையில் அவர், காதல் திருமணத்தின் சவால்களை நகைச்சுவையாக எடுத்துரைத்தார்.

“காதல் பண்ணுறது எளிது என்று எல்லோருமே சொல்வாங்க. ஆனா காதல் கல்யாணம்தான் ரொம்ப கஷ்டமானது. முதலில் பிடித்தவரிடம் காதலைச் சொல்லணும், அவர்களை சம்மதிக்க வைக்கணும். அதற்குப் பிறகு தன்னுடைய காதல் உண்மையானது என்று நிரூபிக்கணும்.

திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னா சொந்தக்காரர்கள் வருவாங்க… அவர்களையும் சமாளிக்கணும். இவ்வாறான பல சவால்களைத் தாண்டித்தான் காதல் திருமணம் நிறைவேறும்,” என்று கலகலப்புடன் கூறினார். மேலும் விழாவில் உள்ளூர் நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.