டெல்லியில், கூட்ட நெரிசல் உள்ளப் பொதுப் போக்குவரத்து மையங்களில் (Public Transit Points) பெண்களைக் குறிவைத்துத் திருடி வந்த, பெண்கள் தலைமையில் இயங்கிய இரண்டு குற்றக்கும்பல்கள் சமீபத்தில் டெல்லி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மற்றும் டெல்லி முழுவதும் செயல்பட்டு வந்த இந்தக் கும்பல்களிடமிருந்து சுமார் ₹1 கோடி மதிப்பிலானத் திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 5 பெண்களில், ஏற்கெனவே 13 குற்ற வழக்குகள் கொண்ட ஒரு குற்றவாளியும் அடக்கம். இந்தக் கும்பல்கள், லிஃப்டுகள் மற்றும் எஸ்கலேட்டர்களில் ஏறும் போதும், நெரிசலான நேரத்தைப் பயன்படுத்தி, பெண்களின் கழுத்தில் இருந்த நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்றப் பொருட்களை மின்னல் வேகத்தில் திருடிவிட்டு, கூட்டத்துடன் கலந்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். மீட்கப்பட்டப் பொருட்களில் தங்கம், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை அடங்கும். இதுபோன்றச் சம்பவங்களைத் தடுக்க ரயில் நிலையங்களில் கண்காணிப்பு (Surveillance) தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.