ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், நள்ளிரவு 2 மணிக்கு சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், அந்தப் பெண் சிறப்பான உள்கட்டமைப்புடன் கூடிய சைக்கிள் ஓட்டும் பாதையில், தனது நண்பர்களுடன் உற்சாகமாகச் சைக்கிள் ஓட்டுகிறார்.
View this post on Instagram
இந்தச் சாலையில் சைக்கிள் ஓட்டுவது “நிஜமில்லை” என்றும், பார்ப்பதற்கு “ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல்” இருப்பதாகவும் இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்
இந்த வீடியோ, இந்தியாவின் முதல் சூரிய ஒளியால் இயங்கும் (Solar-covered) மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் ‘ஹெல்த்வே சைக்கிளிங் ட்ராக்கில்’ (Healthway Cycling Track) எடுக்கப்பட்டது.
அவுட்டர் ரிங் ரோட்டிற்கு (Outer Ring Road) இணையாக உள்ள இந்த 23 கி.மீ. சாலை, சுமார் 16,000 சோலார் பேனல்களைக் கொண்டுள்ளது.
இதில் சிசிடிவி கேமராக்கள், இரவு விளக்குகள், சைக்கிள் வாடகை மையங்கள், கழிப்பறைகள் மற்றும் உட்காரும் இடங்கள் போன்றப் பல வசதிகள் உள்ளன. இந்தப் பாதுகாப்பான உள்கட்டமைப்புதான் நள்ளிரவு சைக்கிள் பயணத்திற்கு வழி வகுத்துள்ளது.
