திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி டிவி மெக்கானிக் ஏ. ஐசக் நியூட்டன் என்பவர், கடந்த ஜூலை 9-ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் ₹.2,707-க்கு ஒரு மினி ப்ரொஜெக்டரை ஆர்டர் செய்துள்ளார்.
ஜூலை 14-ஆம் தேதி அவருக்குக் கிடைத்த பார்சலைத் திறந்து பார்த்தபோது, உள்ளே டி-சர்ட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதைத் திருப்பி அனுப்பிய நியூட்டன், பணத்தைத் திரும்பப் பெறுமாறு வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டார்.
ஆனால், அமேசான் நிறுவனம், நியூட்டனே தயாரிப்பை மாற்றியதாகக் குற்றம் சாட்டி, பணத்தைத் திரும்பத் தர மறுத்துள்ளது. அமேசானின் இந்தச் செயலால் ஏமாற்றமடைந்த அவர், சட்ட அறிவிப்பு அனுப்பியபோது அசல் தொகையை நிறுவனம் திரும்ப வழங்கியது.
TN NEWS : Tiruchi court fines Amazon ₹35,000 for delivering t-shirts instead of ordered projector.
On July 9, he ordered a mini projector priced at ₹2,707. The product was delivered on July 14, but when Isaac opened the package and he found T-shirts instead of the projector. pic.twitter.com/izbiHzMqQh
— News Arena India (@NewsArenaIndia) December 2, 2025
“>
அசல் தொகையைத் திரும்பப் பெற்றாலும், ஏமாற்றப்பட்டதாலும், மன உளைச்சலுக்கும் ஆளானதாலும் ஐசக் நியூட்டன், திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ₹.5 லட்சம் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமேசான் மற்றும் டெலிவரி முகவர் மீது தவறு இருப்பதை உறுதி செய்தது. இதனையடுத்து, நவம்பர் 28 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஐசக் நியூட்டனுக்கு இழப்பீடாக ₹.25,000-ம், நீதிமன்றச் செலவுகளுக்காக ₹.10,000-ம், ஆக மொத்தம் ₹.35,000-ஐ அமேசான் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
