மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே டீக்கடை நடத்தி வந்த ரஞ்சித் (35) என்பவரின் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தவர் பாலகுரு (50). இன்று (டிச. 3) காலை, கடையில் தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் பல்பு, அருகில் இருந்த இரும்புக் கம்பியில் உரசியதால் மின்கசிவு ஏற்பட்டு, கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைத் தற்செயலாகத் தொட்ட பாலகுரு மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் ரஞ்சித் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த இச்சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
