சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான காணொலிகள் பதிவேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது நகைப்பையும் வியப்பையும் ஒருசேரத் தூண்டும் வித்தியாசமான சம்பவம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
தனது நண்பர் ₹4,000-க்கு வாங்கிய புதிய ஸ்மார்ட்போனை, ஒரு இளைஞர் உற்சாகமாக ‘அன்பாக்சிங்’ (Unboxing) செய்யும் காணொலியே அது. டெல்லியில் உள்ள ஐ.எஃப்.எஃப்.சி.ஓ. சௌக்கில் வாங்கியதாகக் கூறி, அதன் கேமரா முதல் அனைத்து அம்சங்களும் ‘பட்ஜெட் விலைக்கு ஏற்றதாக’ உள்ளது என்று அவர் விவரித்தார்.
இருப்பினும், போனை இயக்க (On) முயன்றபோது அது செயல்படவில்லை. பாதுகாப்புக் கவரை நீக்கிய பின்னரே அந்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் கையில்இருந்தது, மொபைல் வடிவில் வெட்டப்பட்ட ஒரு தடித்த கண்ணாடிக் குண்டு மட்டுமே! பின்புறத்தில் ஸ்டிக்கர் பேப்பர் ஒட்டப்பட்டு, அதன்மீது கவரும் போடப்பட்டதால், பார்ப்பதற்கு அசல் போன் போலவே காட்சியளித்துள்ளது.
நண்பரின் இந்த விநோதச் செயலால் திகைத்துப்போன அந்த இளைஞரின் முகபாவம், அந்தக் காணொலியைப் பார்த்த அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
<a href=”http://
View this post on Instagram
“>
குறைந்த விலையில் பொருள்களை வாங்கும்போது, அதன் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்யாமல் அவசரப்படுவது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இந்தச் சம்பவம் நகைச்சுவையுடன் உணர்த்தியுள்ளது.
