திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சேர்ந்த ஹரிஷ் (22) என்பவர், நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரின் உறவினர் ஆவார். அந்த மாணவியைப் பார்க்கச் சென்றபோது, அவரது தோழியான திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ஹரிஷுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி அந்தச் சிறுமியைப் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ஹரிஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்திப் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹரிஷ், அந்தச் சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததில், தற்போது அந்தச் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி குறித்து மருத்துவமனை நிர்வாகம், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். சிறுமி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஹரிஷை வலைவீசித் தேடி வருகின்றனர்.
