மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ (ITI) ஆசிரியர் ஒருவர், வகுப்புக்கு வராத மாணவர் ஒருவரை தொலைபேசியில் கடுமையாக திட்டியதோடு, மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஜபல்பூர் மதன் மஹால் பகுதியில் உள்ள அரசு ஆதர்ஷ் ஐ.டி.ஐ-யில் பணியாற்றும் அந்த ஆசிரியரின் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மெக்கானிக்கல் டிரேட் பிரிவைச் சேர்ந்த அஜித் வர்மா என்ற அந்த ஆசிரியர், வகுப்புக்கு வராமல் வெளியேயும் சுற்றிவிட்டு, தன்னிடம் சொல்லாமல் வீட்டிற்குச் சென்ற மாணவரை தொலைபேசியில் திட்டுகிறார். அந்த ஆடியோவில், “நான் உன்னை செருப்பால் அடிப்பேன். யாரிடம் கேட்டுக்கொண்டு வீட்டுக்குப் போகிறாய்?” என்று மிரட்டுகிறார். மேலும், “நீ என் கண் முன்னால் இருந்தாய்… வீட்டிற்குப் போவதற்கு முன் ஏன் எனக்கு ஃபோன் செய்யவில்லை? இது உன் வீட்டு கடைகடையா? பயனற்ற பையனே…” என்று மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கோபப்படுகிறார்.
‘Jute-Jute Marunga,’ Audio Clip Of Jabalpur Govt ITI Teacher Ab*sing Student Goes Viral#MadhyaPradesh #MPNews #Student #Jabalpur pic.twitter.com/ortMqMvIwd
— Free Press Madhya Pradesh (@FreePressMP) December 1, 2025
மாணவன் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டும், ஆசிரியர் தொடர்ந்து தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்த ஆடியோ வைரலானதை அடுத்து, இந்த ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ (NSUI) போராட்டம் நடத்தியுள்ளது.
