ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை ஐசியூ-வில் (தீவிர சிகிச்சைப் பிரிவு) கடந்த சனிக்கிழமை மாலை 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்ததால், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐசியூ-வுக்குள் நுழைந்த அந்தப் பாம்பு, நர்சிங் ஊழியர்களின் அறைகள் வழியாகச் சென்று, மருந்து அட்டைப் பெட்டிகளுக்குள் மறைந்து கொண்டது. அச்சமயத்தில் ஐசியூ-வில் நோயாளிகளும் இருந்ததால், நிலைமை பதட்டமானது. உடனடியாக வரவழைக்கப்பட்ட பாம்பு பிடிப்பவர் கோவிந்த் சர்மா, சுமார் 10 நிமிட முயற்சிக்குப் பிறகு விஷமற்ற தமன் (Rat Snake) வகையைச் சேர்ந்த அந்தப் பாம்பை வெற்றிகரமாக மீட்டார்.
कोटा के न्यू मेडिकल कॉलेज हॉस्पिटल के सर्जिकल ICU में शनिवार शाम उस समय अफरा-तफरी मच गई जब करीब 6 फीट लंबा धामन प्रजाति का सांप वार्ड में घुस आया। सांप ICU से होकर नर्सिंग स्टाफ के चेंबर तक पहुंचा और स्टोर रूम में रखे दवा और ग्लूकोज के कार्टन के बीच जाकर छिप गया। उस समय ICU में… pic.twitter.com/8n0Sz5LyEU
— AajTak (@aajtak) December 1, 2025
“>
ஸ்டோர் ரூமின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் வழியாகவே பாம்பு உள்ளே நுழைந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மருத்துவமனை நிர்வாகம் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
