திருமண விழாக்கள் தற்போது மிகவும் பரபரப்பான நிகழ்வுகளாக மாறி வரும் நிலையில், ஒரு திருமணத்தில் காலணி திருடும் சடங்கு, திடீரென பெரிய கைகலப்பாக மாறிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மணமகனின் காலணிகளைத் திருடிச் செல்வதற்காகச் சில இளைஞர்கள் சண்டையிட்டுக் கொண்டபோது, அந்தச் சடங்கு ஒரு சண்டையாக மாறியதால், திருமண மண்டபமே ரஷ்யா-உக்ரைன் போர்க் களமாக மாறியது போலக் காட்சி அளித்ததாக நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.
View this post on Instagram
மணமகனின் காலணிகளைப் பறிப்பதற்காகச் சில இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு சடங்கிற்காகச் செய்யப்படும் இந்தச் செயல், உண்மையான போராக மாறிவிட்டதை அங்கிருந்தோர் வியப்புடன் பார்த்தனர். காலணிகளைப் பிடுங்குவதற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள், ஒரு கட்டத்தில் சோபாவின் மீது விழுந்து ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டு போராடினர்.
இந்தச் சண்டையைச் சுற்றியிருந்த விருந்தினர்கள் விலக்கி விட முயன்றபோதிலும், இளைஞர்கள் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. இறுதியாக, அந்த இளைஞர்களில் ஒருவர் போரில் வெற்றி பெற்று, காலணியைப் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து அவசரமாக ஓடித் தப்பிச் சென்றார். இந்த வெற்றியைக் கண்ட மற்ற இளைஞர்கள் ஏமாற்றத்துடன் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு முகத்தைச் சுளித்து நின்றனர். மணமகன் காலணித் திருட்டுச் சடங்கில் ஏற்பட்ட இந்த சண்டையும், பரபரப்பான மோதலும் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
