கேரளாவில் ஒரு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டுக்குள் நுழைந்த இரண்டு பெண்கள், இரண்டு ஏர் கண்டிஷனர் (AC) கருவிகளைத் திருடிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியாகி உள்ளன. பெண்கள் நடத்திய இந்தக் ‘துணிகரத் திருட்டு’ சம்பவம் குறித்துப் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சிசிடிவி காட்சிகளின்படி, திருட்டு நடந்ததற்கு முந்தைய நாளிலேயே இந்தப் பெண்கள் அந்தப் பகுதியில் வந்துள்ளனர். மேலும், அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு அவர்கள் வீட்டின் பூட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் பதிவாகி உள்ளது.

 

அடுத்த நாளில், அவர்கள் மீண்டும் வந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். உள்ளே இருந்த இரண்டு ஏசி-க்களைக் கவனமாகக் கழற்றி எடுத்து, பின்னர் அதனைச் சுமந்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு, பெண்கள் துணிந்து இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர்.