பீகார் மாநிலம் முசாபர்பூரின் (Muzaffarpur) மீனாப்பூர் பகுதியைச் சேர்ந்த, இரண்டாம் வகுப்பு மாணவன் ஆதித்ய ராஜ் (12) கொலை வழக்கில், சிறுவனின் தந்தை விஜய் பிரசாத் (Vijay Prasad) மற்றும் அவனதுச் சித்தி பிங்கி தேவி (Pinki Devi) ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதித்யாவின் அம்மாவின் அப்பா(தாத்தா ) வினோத் பிரசாத்தின் (Vinod Prasad) புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆதித்யா கடந்த நவம்பர் 19 ஆம் தேதி காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், நவம்பர் 27 ஆம் தேதி ஹசரத்பூர் பகுதியிலுள்ள ஒரு செங்கல் சூளையில் (Chimani) இருந்து அவனது அழுகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆதித்யாவின் தாயார் விபா தேவி 2020 ஆம் ஆண்டு இறந்த பிறகு, ஆதித்யாவிற்குச் சேர வேண்டிய 4 ஏக்கர் நிலத்தில் பாதியை ஆதித்யா மற்றும் அவனதுச் சகோதரன் ஆஷிஷ் பெயரில் எழுதிக் கொடுப்பதாகப் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், அதற்குச் சித்தி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
சதி செய்து ஆதித்யாவைக் கொலை செய்து, சடலத்தை மறைத்துவிட்டதாக ஆதித்யாவின் நானா வினோத் பிரசாத் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இருப்பினும், ஆதித்யாவுக்கு நிலத்தை எழுதிக் கொடுக்க நானா அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் தந்தை விஜய் பிரசாத் மறுப்புக் கூறியுள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை (Postmortem Report) வந்த பின்னரே கொலையின் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
